Friday 31 January 2014

சிவா, அஜீத், தமன்னா: மீண்டும் சேரும் 'வீரம்' வெற்றிக் கூட்டணி?

'வீரம்' சிவா அஜீத் குமாரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறாராம்.                                                                                                                    இயக்குனர் சிவா தமிழில் இதுவரை சிறுத்தை, வீரம் ஆகிய 2 படங்கள் தான் கொடுத்துள்ளார்.                                                                                                             ஆனால் இரண்டுமே வெற்றிப் படங்கள் என்பதால் கோடம்பாக்கத்தின் கண் முழுவதும் அவர் மீது தான்.                                                                                                                                                                                  இந்நிலையில் சிவாவும், அஜீத்தும் மீண்டும் ஒன்று சேர்ந்து படம் பண்ணவிருக்கிறார்கள். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது என்று கூறப்படுகிறது.

வீரம் படத்தை அடுத்து இந்த படத்திலும் தமன்னாவையே ஹீரோயினாக நடிக்க வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த படத்திலும் தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனால் அவர் அஜீத்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை ஆவார். தமிழில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு வீரம் படம் தான் ஒரு பிரேக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா தமிழில் முதன்முதலில் எடுத்த சிறுத்தை படத்திலும், அதை தொடர்ந்து இயக்கிய வீரம் படத்திலும் ஹீரோக்கள் தான் வேறு, வேறு நாயகி தமன்னா தான்.

சிவா அஜீத்தை வைத்து மீண்டும் எடுக்கும் படத்திலும் தமன்னா ஒப்பந்தம் ஆனால் தொடர்ந்து ஒரே இயக்குனரின் 3 படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை பெறுவார்.

 source:oneindia

Thursday 30 January 2014

அஜீத் படத்தில் கவனத்தை திருப்பிய கெளதம்மேனன்!

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்த சூர்யா கைவிட்ட நேரம், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற கெளதம்மேனனுக்கு கைகொடுத்தார் சிம்பு.                                                                                                                                                                                                                                            அந்த படத்தை தானே தயாரிக்கும் கெளதம், படப்பிடிப்பை தொடங்கி விட்டால் பைனான்ஸ் பிரச்னைகள் எளிதில் கிடைத்து விடும் என்று நினைத்திருந்தாராம்.                                                                                                                                                                                                                                                                                      ஆனால் இரண்டு வாரங்கள் கால்சீட் கொடுத்து சிம்பு நடித்து விட்டபோதும் பைனான்ஸ் பிரச்னைகள் கைக்கு வரவில்லையாம். அதனால் அடுத்தபடியாக சிம்பு, வாலு மற்றும் பாண்டிராஜ் இயககும் பட வேலைகளில் இறங்கி விட்டார்.

இந்தநிலையில், பிப்ரவரி 6-ந்தேதி முதல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறவிருப்பதால், இப்போது கெளதம்மேனனின் மொத்த கவனமும் அஜீத் படத்தில் திரும்பியுள்ளதாம். அப்படத்துக்கு பைனான்ஸ் ரெடியாக இருப்பதால்,                                                                                                                                                                                                                                அஜீத் படத்தை இயக்கிக்கொண்டே இடையிடையே சிம்பு நடிக்கும் படத்தை நகர்த்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

ஆனால், கெளதம்மேனனுக்கு பைனான்ஸ் தருவதாக வாக்களித்திருந்தவர்கள், கடைசி நேரத்தில் கைவிரித்ததற்கு, இரண்டு தயாரிப்பாளர்கள், அவர் மீது பண மோசடி செய்து விட்டதாக புகார் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.                                                                                                           source:cinema.dinamalar

Wednesday 29 January 2014

அஜீத்-விஜய்யால் ஜாக்கிசானுக்கு பாதிப்பு

அஜீத், விஜய் படத்தால் ஜாக்கிசான் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாலும், போட்டியை சமாளிக்க முடியாது என்பதாலும் ரிலீஸ் தள்ளிப்போடப்படுகிறது.                                                                                                                                                                                                                                                                                                               அந்தவரிசையில் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானதால் பல சிறுபட்ஜெட் படங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகிறது. இந்த நிலை ஜாக்கிசான் படத்துக்கும் ஏற்பட்டது. பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த போலீஸ் ஸ்டோரி (6ம் பாகம்) திடீரென்று தள்ளிப்போடப்பட்டது. ஒரு மாதம் தாமதமாக பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் தமிழ், ஆங்கிலத்தில் இப்படத்தை வெளியிடுகிறார். இதில் ஜாக்கிசான் நடித்திருப்பதுடன் அவரே தயாரித்தும் இருக்கிறார். டிங் ஷெங் இயக்கி இருக்கிறார்.                                                                                                                                                                                                                             ஏற்கனவே சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்தந்த மொழிகளில் இது ரிலீஸ் ஆகி வசூல் ஈட்டியது. ஆங்கிலத்தில் இந்தியாவில்தான் முதன்முதலாக ரிலீஸ் ஆகிறது. 

அமெரிக்காவில் சில  மாதங்களுக்கு பிறகே ரிலீஸ் ஆக உள்ளது. இது தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 சென்டர்களில் வெளியாகும் இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி                                source: cinema.dinakaran

Saturday 25 January 2014

ரஜினி இடத்தில் அஜீத். கே.வி.ஆனந்த் அதிரடி முடிவு


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இதே நிறுவனம் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளது. அந்த படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கே.வி.ஆனந்த இயக்கிய முதல் படமான 'கோ' படத்திலேயே அஜீத் நடிக்க ஏற்பாடுகள் நடந்துவந்தன. ஆனால் திடீரென அந்த படம் ஜீவாவுக்கு கைமாறியது. தற்போது அஜீத்துடன் கே.வி.ஆனந்த் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அஜீத், தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

கே.வி. ஆனந்த் இந்த படத்திற்கான திரைக்கதையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முழுவதும் முடித்துவிட்டாராம். இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானவர் ரஜினிதான் என்பது அவரது எண்ணம். ஆனால் ரஜினியுடன் தற்போது இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அந்த கதையை தற்போது அஜீத்துக்கு பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார் என தெரிகிறது.

Friday 24 January 2014

வீரம் – 40 கோடி; ஜில்லா – 34 கோடி : தமிழ்நாட்டின் முதல்வார வசூல் நிலவரம்! ( லேட்டஸ்ட் ரிப்போர்ட் )

ஜில்லா’ படத்தை விட ‘வீரம்’ தான் பார்க்கும்படியாக உள்ளது என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக இருந்தாலும் வசூலைப் பொறுத்தவரை வீரத்தை விட ஜில்லா படம் தான் வசூல் சாதனை புரிந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ரிலீசான முதல் நாளிலேயே ‘ஜில்லா’ படம் 12 கோடி ரூபாயை வசூல் செய்து விட்டதாகவும் தொடர்ந்து அதுதான் வசூலில் முன்னணி யில் உள்ளதாகவும் பல ஊடகங்கள் ஒரே மாதிரியான செய்தியை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் மேற்சொன்ன இரண்டு படங்களின் உண்மையான முதல்வார வசூல் நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாடு திரையரங்குகளின் வசூல் நிலவரங்கள் குறித்தான தகவல்களை அப்டூடேட் வைத்திருக்கும் தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட் ட்ரேடு இதழில் ஆசிரியரும், சினிமா விமர்சகருமான ராமானுஜத்தை நாம் மீண்டும் தொடர்பு கொண்டோம்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இரண்டு படங்களின் முதல்நாள் வசூல் நிலவரங்களை குறித்தான தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர் ‘வீரம்’, ‘ஜில்லா’ படங்களின் ஒருவார தமிழ்நாட்டு வசூல் விபரங்களையும் நமது வாசகர்களுக்காக பிரத்யேகமாக தந்தார்.
இதோ இனி அவரே பேசுகிறார்…
“‘வீரம்’, ‘ஜில்லா’ ரெண்டு படங்களையும் கம்பேர் பண்ணும்போது முதல்வார வசூலில் ‘வீரம்’ தான் முதல் இடத்துல இருக்கு. ரிலீசான முதல்நாள் மட்டும் தமிழ்நாட்டில் வீரத்தோட வசூல் 5 கோடியாகவும், ஜில்லாவோட வசூல் 4. 50 லட்சம் கோடியாகவும் இருந்தது. அந்த வகையில பார்த்தீங்கன்னா தமிழ்நாடு முழுவதும் ‘வீரம்’ படத்தோட ஒருவார வசூல் 40 கோடியாக இருந்தது. ‘ஜில்லா’வோட ஒருவார தமிழ்நாட்டு வசூல் 34 கோடியாக இருந்தது. இதுதான் தமிழ்நாட்டோட உண்மையான வசூல் நிலவரம்.
ஆனால் இந்த உண்மைகளை திட்டமிட்டு மறைச்சு பல ஊடகங்கள் வீரத்தை விட ‘ஜில்லா’ தான் வசூல்ல முதல் இடத்துல இருக்குன்னு எழுதுறாங்க. அதுதான் ஏன்னு தெரியல.
முதல்வார வசூல் நிலவரம் தான் இப்படி இருந்ததே தவிர ரெண்டாவது வாரம் ரெண்டு படங்களுக்குமே கூட்டம் குறைய ஆரம்பிச்சிருச்சுங்கிறது தான் உண்மை. அதிலும் வீரத்தை விட ஜில்லா ரிலீசான தியேட்டர்கள்ல காட்சிகளோட எண்ணிக்கையை கொறைச்சுட்டாங்க.
உதாரணத்துக்கு மதுரை பக்கத்துல இருக்கிற ஆண்டிப்பட்டி வி.பி.சி தியேட்டர்ல காலை 11 மணி காட்சியும் நைட்டு 10 மணி காட்சியில் ஜில்லா படம் கேன்சல் பண்ணியிருக்காங்க. தமிழ்நாடு முழுக்க இருக்கிற பல தியேட்டர்கள்லேயும் ஜில்லாவோட நிலைமை இதுதான். அதுக்கு காரணம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரல.
சென்னை மாதிரியான மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் இருக்கிற ஏரியாக்கள்ல ஒரு ஷோவுக்கு 100 ரசிகர்கள் வரையும், ஆண்டிப்பட்டி மாதிரியான பி அண்ட் சி ஏரியாக்கள்ல 70,80 ரசிகர்களும் தான் படம் பார்க்க வர்றாங்க. இப்படி கூட்டம் கொறைஞ்சு போனாலும் இந்தளவுக்கு வசூல வர இன்னொரு முக்கியமான காரணம் டிக்கெட் ரேட்.
கவர்மெண்ட் வசூல் பண்ணச் சொன்ன விலையை விடவும் அதிகபட்சம் 300 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கும் தியேட்டர்காரங்க டிக்கெட்டை வித்தாங்க. 10 ரூபாய் டிக்கெட்டெல்லாம் இல்லவே இல்லை. அதனால தான் இந்தளவுக்கு பணத்தையாவது ரெண்டு படங்களும் வசூல் பண்ணிச்சு. அப்படி இல்லாம கவர்மெண்ட் பிக்ஸ் பண்ணின விலைகள்ல மட்டும் டிக்கெட்டை வித்துருந்தாங்கன்னா ரெண்டு ஹீரோக்களும் வாங்கிய சம்பளத்தைக் கூட வீரமும், ஜில்லாவும் வசூல் பண்ணியிருக்காது.
அதுமட்டுமில்லாம தமிழ்நாடு அரசு இந்த ரெண்டு படங்களுக்குமே வரிச்சலுகை கொடுக்கல. இதனால வரக்கூடிய வருமானத்தை தமிழகம் முழுக்க இருக்கிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போயிருக்கு. இது உண்மையிலேயே வரவேற்கக்கூடிய விஷயம்.
இதை தொடர்ச்சியா தமிழக அரசு இனி வருகிற எல்லா பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு கடைபிடிச்சாங்கன்னா கவ்ர்மெண்ட்டோட வருவாய் இன்னும் அதிகரிக்கும்” என்றார் ராமானுஜம்.

Tuesday 21 January 2014

ஆஸ்திரேலியாவில் 'வீரம்' டாப், மலேசியாவில் 'ஜில்லா' டாப்

அஜீத்தின் வீரம் படம் ஆஸ்திரேலியாவில் அதிக வசூலும், விஜய்யின் ஜில்லா மலேசியாவில் அதிக வசூலும் செய்துள்ளன.  
                                                                                                                                                                    கடந்த 10ம் தேதி ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் இன்னும் மவுசு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகம், அண்டை மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் 2 படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.                                                                                                                                                                                                                                                                    இந்நிலையில் வெளிநாடுகளில் வீரம் மற்றும் ஜில்லாவின் வசூல் விவரங்களை பார்ப்போம்.

ஆஸ்திரேலியா                                                                                                                                                                                                                                                                                                   2வது வார இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஜில்லா படம் ரூ.23.12 லட்சம் வசூலித்துள்ளது. ஆனால் வீரம் ஜில்லாவை விட அதிகமாக ரூ. 44.94 லட்சம் வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

மலேசியா                                                                                                                                                                                                                                                                                              மலேசியாவில் படம் ரிலீஸான 10 நாட்களில் ஜில்லா ரூ.1.54 கோடி வசூலித்துள்ளது. வீரம் ஜில்லாவை விட சற்று குறைவாக ரூ.1.46 கோடி வசூல் செய்துள்ளது.
                                                                                                                                                                   பாக்ஸ் ஆபீஸ்                                                                                                                                                                                                                                                                                            மலேசிய பாக்ஸ் ஆபீஸில் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த வீரம் இரண்டாவது வாரத்தில்(16 முதல் 19ம் தேதி வரை) 4வது இடத்திற்கு வந்தது. கடந்த வாரம் 2வது இடத்தில் இருந்த ஜில்லா இரண்டாவது வாரத்தில் 5வது இடத்திற்கு சென்றுவிட்டது.
                                                                                                                                                           அமெரிக்கா                                                                                                                                            
அமெரிக்கா வீரமும் சரி, ஜில்லாவும் சரி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள்                            
                                                                                                                                                                      ஜில்லாவும், வீரமும் இப்படி வசூலை அள்ளுவதற்கு காரணம் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் தான். தங்களின் பிரிய நடிகர்களின் படத்தை தியேட்டரில் பார்த்து படத்தை ஹிட்டாக்கியுள்ளனர்.


Monday 20 January 2014

மீண்டும் 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத்

மீண்டும் 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத் வீரம் படத்தை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள்.                                                     இயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட். ஆம் சிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது.                                                            அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை எடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தார். இந்த படமும் ஹிட்டாகியுள்ளது. வீரம் படத்தை அடுத்து அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்நிலையில் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு அஜீத்தும், இயக்குனர் சிவாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்களாம். ஏற்கனவே வீரம் படத்தை ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 19 January 2014

அஜீத்தும் தயாரிப்பாளராகிறார்?

Posted Image

ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு புதிய இயக்குனர், நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரையடுத்து அந்த பட்டியலில், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் தங்களது பேனரில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.


Posted Image


இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜீத், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம்.


Posted Image


நல்ல திறமையான நடிகர், டைரக்டர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.


இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட ஹீரோக்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம்.


அதோடு, சில புதுமுக படைப்பாளிகளும் அணிவகுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். 


Saturday 18 January 2014

அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு

அஜீத்துடன்  ஒரு  படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை.                                                         அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர்.

அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.
"அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம்... ஆனால் அவ்வளவையும் எழுத முடியாதே.. நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத் சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார். அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது', என்றார். நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்க வைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம். அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார். சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார். 'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்," என்றார். 

Friday 17 January 2014

அஜீத்தின் 'வீரம்' பார்த்தேன், மீண்டும் பார்க்கப் போகிறேனே: சிம்பு


சென்னை: வீரம் படத்தை பார்த்த சிம்பு அஜீத்தை பாராட்டியுள்ளார். மேலும் வீரம் படத்தை மீண்டும் பார்க்கப் போவதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர். அஜீத்தின் படங்களை முதல்நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவார். ஆரம்பம் ரிலீஸான அன்று காலை காட்சியை சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பார்த்தார். ஆனால் வீரம் ரிலீஸான அன்று சிம்பு வெளிநாட்டில் இருந்ததால் படத்தை உடனே பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சாரி, ஊரில் இல்லை. மேலும் பிசியாக வேறு இருந்தேன். தற்போது வீரம் படம் பார்த்தேன். தலயை மிகவும் பிடித்திருந்தது. பண்டிகை காலத்திற்கு ஏற்ற படம். மீண்டும் இந்த படத்தை பார்க்கப் போகிறேன். இயக்குனர் சிவா தல-இன் மாஸை புரிந்து கொண்டு படத்தில் சரியான அளவு சென்டிமென்ட், ஆக்ஷன் வைத்துள்ளார்...மாஸ்ஸ்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/simbu-do-it-again-ajith-191545.html