Tuesday 29 April 2014

அஜீத் பிறந்த நாள்.... கொண்டாட்டம்!

1.அமர்க்களம்
அன்றைக்கு அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறதாம்.
2.ஆரம்பம்
டி வி சேனல்கள் மட்டும் சும்மா இருக்குமா... அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜெயா டிவி ஆரம்பம் படத்தை ஒளிபரப்புகிறது. கடந்த தீபாவளிக்கு வந்த படம் இது. அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்திருந்தனர்.
3.வீரம்
ஜெயாவுக்குப் போட்டியாக ஆரம்பத்தை விட புதிய படமான வீரம் படத்தைத் திரையிடவிருக்கிறது சன் டிவி. இந்தப் படத்தில் தமன்னா அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான படம் இது.
4.புதுப்பட போஸ்டர்(thala55)
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி மே 1ந் தேதி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்களாம்.

5.HAPPY BIRTHDAY THALA
MAY-1ST VIJAY TV SPECIAL PROGRAM 10AM.
6.Varalaaru‬ (Raj)
7.Billa‬(Kalaignar)

Thursday 24 April 2014

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

                                                            பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு துவங்கியவுடன் வாக்களித்தார். 



இந்நிலையில் அஜீத் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.                                                           

Tuesday 22 April 2014

கௌதம் மேனன் +அஜித் +விவேக் +ஹாரிஸ் ஜெயராஜ்

ஜித்-கௌதம் மேனன் இணைந்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு, கௌதமின் வழக்கமான பாணியில் நடக்காமல் வேகமாக நடந்துவருகிறது. ஒருபுறம் ஷூட்டிங்கையும் நடத்திக்கொண்டு, மறுபுறம் படத்திற்கு தேவையான நடிகர்களையும் செலக்ட் செய்துகொண்டிருக்கும் கௌதம் மேனன், சமீபத்தில் தன் படக்குழுவில் நடிகர் விவேக்கையும் சேர்த்திருக்கிறார். 


விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ’நான் தான் பாலா’ திரைப்படத்தை சமீபத்தில் கௌதம் மேனனுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் விவேக். படத்தை முழுவதுமாக பார்த்த கௌதம் மேனன் ‘உங்களை இதுவரையிலும் ஒரு காமெடியனாக தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்க்கும்போது காமெடியன் என்பதை முழுவதுமாக மறந்துவிட்டேன்” என்று கூறி சிலாகித்திருக்கிறார். மேலும் கௌதம் அஜித்துடன் இணைந்திருக்கும் திரைப்படத்தில் உள்ள காமெடியுடன் கலந்த எமோஷனல் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்றும் விவேக்கிடம் கேட்டிருக்கிறாராம். 

கௌதம் மேனனும் விவேக்கும் மின்னலே திரைப்படத்திற்குப் பிறகு எந்த திரைப்படத்திலும் இணையவில்லை. அதேமாதிரி அஜித்துடன் விவேக் கிரீடம் படத்தில் இணைந்து நடித்திருந்தார். கௌதம் மேனன் - அஜித் - ஹாரிஸ் ஜெயராஜ் - விவேக் என இந்த கூட்டணி பட்டையை கிளப்புவதாக பேசிக்கொள்கின்றனர் திரையுலகினர்.
                                                                                                                                       
http://nakkheeran.in/

Saturday 12 April 2014

அஜித் - கௌதம் மேனன் படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்களா?

 கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு டமீபத்தில் தொடங்கியது.

இப்படத்திற்கு 'ஆயிரம் தோட்டாக்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். EM&C நிறுவனம் இப்பட பெயர் டிசைனை வடிவமைக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி இந்தப் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
                                                                                                                                              இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே  அஜித்தும் அஜித்தும் மோதும் சண்டைக்காட்சியைப் படமாக்கினார்கள்.

கெளதம் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டைட்டில் குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
                           

Friday 11 April 2014

அஜீத் பிளாஷ்பேக் ஸ்டோரி

மே 1ம் தேதி அஜீத்துக்கு பிறந்த நாள். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அதிகார பூர்வமாக அவர் அறிவித்த பிறகும் கூட, அவருக்கான ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும் இயங்கி வருகின்றன. இதுவரை அஜீத் 54 படங்களில் நடித்துள்ளார். அதைப்பற்றிய தொகுப்பு இது.
தமிழில் செல்வா இயக்கிய ‘அமராவதி’ மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜீத், பிறகு தெலுங்கு, இந்தியில் சேர்த்து 54 படங்களில் நடித்துள்ளார். விரைவில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 55வது படம். அஜீத்தை 2 படங்களில் இயக்கியவர்கள் கே.சுபாஷ், அகத்தியன், ராஜ்கபூர், எஸ்.எழில், கே.எஸ்.ரவிக்குமார், விஷ்ணுவர்தன். ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை கே.சுபாஷ் இயக்கினார். ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’ படங்களை அகத்தியன் இயக்கினார்.
‘அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ படங்களை ராஜ்கபூர் இயக்கினார். ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ படங்களை எஸ்.எழில் இயக்கினார். ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ‘பில்லா’ ரீமேக், ‘ஆரம்பம்’ படங்களை விஷ்ணுவர்தன் இயக்கினார்.
அஜீத்தை ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என 4 படங்களில் சரண் இயக்கினார்.
ஒரு படத்தில் மட்டும் அஜீத்தை இயக்கியவர்கள் லிஸ்ட் கொஞ்சம் நீள்கிறது. ‘பிரேம புஸ்தகம்’ கொல்லப்புடி சீனிவாஸ், ‘பாசமலர்கள்’ சுரேஷ் மேனன், ‘ராஜாவின் பார்வையிலே’ ஜானகி சவுந்தர், ‘ஆசை’ வசந்த், ‘கல்லூரி வாசல்’ பவித்ரன், ‘மைனர் மாப்பிள்ளை’ வி.சி.குகநாதன், ‘ராசி’ முரளி அப்பாஸ், ‘உல்லாசம்’ ஜேடிஜெர்ரி, ‘பகைவன்’ ரமேஷ் கிருஷ்ணன், ‘ரெட்டை ஜடை வயசு’ சி.சிவகுமார், ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ விக்ரமன், ‘உயிரோடு உயிராக’ சுஷ்மா அகுஜா, ‘தொடரும்’ ரமேஷ்கண்ணா,
‘உன்னைத் தேடி’ சுந்தர்.சி, ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘நீ வருவாய் என…’ ராஜகுமாரன், ‘முகவரி’ வி.இசட்.துரை, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ராஜீவ் மேனன், ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ கவிகாளிதாஸ், ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவணசுப்பையா, ‘அசோகா’ சந்தோஷ் சிவன், ‘ரெட்’ சிங்கம் புலி, ‘என்னை தாலாட்ட வருவாளா’ கே.எஸ்.ரவீந்திரன், ‘ஆஞ்சநேயா’ என்.மகாராஜன், ‘ஜனா’ ஷாஜிகைலாஷ், ‘ஜி’ லிங்குசாமி, ‘பரமசிவன்’ பி.வாசு, ‘திருப்பதி’ பேரரசு, ‘ஆழ்வார்’ செல்லா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், ‘ஏகன்’ ராஜுசுந்தரம், ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு, ‘பில்லா 2’ சக்ரி டோலட்டி, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ கவுரி ஷிண்டே, ‘வீரம்’ சிறுத்தை சிவா என, 36 பேர் இயக்கி இருக்கிறார்கள்.
தமிழைத் தவிர தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’, இந்தியில் ‘அசோகா’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படங்களில் மட்டும் அஜீத் நடித்துள்ளார். விஜய்யுடன் ‘ராஜாவின் பார்வையிலே’, பிரசாந்த்துடன் ‘கல்லூரி வாசல்’, விக்ரமுடன் ‘உல்லாசம்’, சத்யராஜுடன் ‘பகைவன்’, கார்த்திக்குடன் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’,
‘ஆனந்த பூங்காற்றே’, பார்த்திபனுடன் ‘நீ வருவாய் என…’, சுரேஷ் கோபியுடன் ‘தீனா’, அப்பாசுடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ஆர்யாவுடன் ‘ஆரம்பம்’ என, மற்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அஜீத் நடித்துள்ளார்.
‘அமராவதி’ படத்தில் அஜீத்துக்கு விக்ரம் டப்பிங் பேசியுள்ளார்.
‘அமர்க்களம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த (பேபி) ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜீத்துக்கு அனொஷ்கா என்ற மகள் இருக்கிறாள். ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை டைட்டிலில் தன் பெயருக்கு முன்னால் போடக் கூடாது என்று கண்டிப்புடன் சொன்ன அஜீத், ‘அசல்’ படத்தின் திரைக்கதை, வசன பணியில் இயக்குனர் சரணுக்கு உதவி செய்தார். அதை மட்டும் டைட்டிலில் போட அனுமதித்தார். கார் ரேஸ் வீரரான அஜீத், கார் பந்தய வீரர் கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறார். தவிர, சொந்தப் படம் தயாரிப்பதற்காக ‘ஏ.கே இன்டர்நேஷனல்’ என்ற கம்பெனியை தொடங்கியுள்ளார்.

Thursday 10 April 2014

Thala55 படத்தில் ஹாலிவுட் இயக்குநர்

ஒரு வழியாக நேற்று அஜித் நடிக்கும் புதிய படத்தினை அதிகாரப்பூர்வமாக பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டார்கள். 
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் இந்த பூஜை நடைபெற்றது. நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இச்சமயத்தில் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இப்படத்தை ஒளிப்பதிவு செய்யப்போவது பிரபல ஆஸ்திரேலிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான Dan Macarthur என்பவராம். இவர் தமிழில் 7up விளம்பரத்திற்கு ஏற்கனவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

விளம்பரமும் ஒளிப்பதிவில் பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய ஸ்டைலே ஒரு சின்ன விஷயத்தையும் கூட அழகாக மிகபிரம்மாண்டமாக காட்டக் கூடியவராம். இதனால் படமும் பெரிய பிரம்மாண்ட படமாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Friday 4 April 2014

அஜித்தின் 55-வது படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி துவங்குகிறது

‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது                                                                                                                                                                                                                                                                                    இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறியிருப்பதாவது  வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது.                                                                                                                                                                                                                                               போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும்

அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
                                                                                                                                                                                              

Wednesday 2 April 2014

தல ஒன்று! வில்லன் இரண்டு!



அஜித் - கெளதம் மேனன் படத்தினைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக இசையமைப்பாளர் மற்றும் வில்லனைப் பற்றிய செய்திகள் இதில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றன.

அஜித் - கெளதம் மேனன் - அனுஷ்கா இணையும் படத்தினை ஏ.என்.ரத்னம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று விசாரித்த போது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி தவறானது. அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.

வில்லன்கள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறது படக்குழு.

படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

சிம்பு - கெளதம் மேனன் இணைந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டான் மெக்கார்தர்(Dan Macarthur), அஜித் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முன்னர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சுகள் நிலவி வந்தன. ஆனால், எஸ்.ஆர்.கதிரிடம் இது குறித்து யாருமே பேசவில்லையாம்.

அஜித் - அனுஷ்கா - அரவிந்த் சாமி - அருண்விஜய் என ஒரு புதிய கூட்டணியுடன் அதிரடியான ஒரு போலீஸ் ஆக்ஷன் கதைக்கு திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.
        source:   tamil.thehindu