Tuesday 18 February 2014

அஜீத்தை பின்பற்றும் மலையாள ஹீரோக்கள் !

சினிமா ஹீரோக்கள் பெரும்பாலும் எவ்வளவு வயதானாலும்,  உடம்பிலும், தலையிலும் முதுமை தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். 

குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் டை அடித்துக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். இப்படி, திரிந்து கொண்டிருந்த நமது ஹீரோக்களின்  இமேஜை சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து தல அஜீத் மங்காத்தா, வீரம் படங்களில் தனது நிஜ தலைமுடி கெட்டப்புடன் நடித்தார் ஆனால் அதுவே இப்போது ஹீரோக்களின் மத்தியில் ஒரு பேஷனாகி விட்டது. தமிழ்நாட்டில் இதை யாரும் பின்பற்றாதபோதும், மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோர் தற்போது தாங்கள் நடிக்கும் படங்களில் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில், மோகன்லால் ஜோஷி இயக்கும் படத்திலும், மம்மூட்டி கேங் ஸ்டார் என்ற படத்திலும், ப்ருதிவிராஜ் செவன்த்டே என்ற படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    நன்றி  :  Swathi  

0 comments:

Post a Comment

Thank You For Your Comment