Tuesday 11 February 2014

‘சால்ட் அண்ட் பெப்பரு’க்கு குட்பை : ஹேர் ஸ்டைலை மாற்றுகிறார் அஜித்!

‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக் ஹேர் ஸ்டைலுக்கு விரைவில் குட்பை சொல்லப் போகிறாராம் நடிகர் அஜித்.

                                                                                ‘மங்காத்தா’ படத்தில் தனது நிஜ ஹேர் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் முடியுடனே நடித்தார் அஜித். அஜித்தின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் அவரது ரசிகர்களில் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனால் ஆரம்பம், வீரம் படங்களிலும் அதே லுக்கில் தான் வந்து அசத்தினார்.

வீரம் படத்துக்குப் பிறகு அஜித் இப்போது கெளதம்மேனன் டைரக்‌ஷனில் நடிக்கத் தயாராகி வருகிறார். ஆனால் இந்தப்படத்தில் அவரது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு குட்பை சொல்லப் போகிறாராம் அஜித். அதற்கு காரணம் டைரக்டர் கெளதம் மேனன் தான்.

படத்தில் அவர் ஒரு துப்பறியும் நிபுணராக வருகிறாராம். இதில் அவரது லுக் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என கெளதம் விரும்பியதால் விஷயத்தை அஜித்திடம் சொல்ல அவரும் ‘கதைக்கு தேவையென்றால் லுக்கை மாற்ற நான் ரெடி’ என க்ரீன் சிக்னல் காட்டி விட்டாராம்.

இதையடுத்து புதிய படத்தில் அஜித்தின் ஹேர் ஸ்டைல் மாறுகிறது.  இதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல ஹேர் ஸ்டைல் டிசைனர் ஒருவருடன் கெளதம் ஆலோசித்து வருகிறார்.

முதல்முறையாக ரெட் ஹேர் லுக் அஜீத்துக்கு கொடுக்கலாமா என்று கூட யோசித்துள்ளார்களாம். புது ஹேர் ஸ்டைல் முடிவான பிறகும் அதை ரிலீஸ் வரைக்கும் சஸ்பென்ஸாக வைக்கலாமா? என்று யோசித்து வருகிறார் கெளதம் மேனன்.                                                                                                                                       source:soundcameraaction

0 comments:

Post a Comment

Thank You For Your Comment